புதுக்குடியிருப்பில் சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது

புதுக்குடியிருப்பில் சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது

புதுக்குடியிருப்பில் சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2022 | 4:10 pm

Colombo (News 1st)  முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக சைக்கிள்களை திருடிய சந்தேகநபர் ஒருவரை CCTV உதவியுடன் பொலிஸார் கைது செய்தனர்.

இதனையடுத்து, இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 5 சந்தேகநபர்களை கைது செய்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 15 சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்