தொழிற்சங்க நடவடிக்கையால் தேங்கியுள்ள 400 தபால் பொதிகள்

தொழிற்சங்க நடவடிக்கையால் தேங்கியுள்ள 400 தபால் பொதிகள்

தொழிற்சங்க நடவடிக்கையால் தேங்கியுள்ள 400 தபால் பொதிகள்

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2022 | 4:03 pm

Colombo (News 1st) தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனையின் வெளிநாட்டு பிரிவில் சுமார் 400 பொதிகள் தேங்கியுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் தபால் திணைக்களத்திற்கு இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகத் தொகை நட்டம் ஏற்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

எனவே, நிலைமையை வழமைக்கு திருப்ப முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்காவிட்டால், அவர்கள் சேவையை விட்டு விலகியவர்களாகவே கருதப்படுவார்கள் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எரிபொருள் நெருக்கடி காரணமாக தற்போது செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டுமே தபால் சேவைகள் இயங்குகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்