வரலாறு காணாத பணவீக்கம் பதிவு

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பணவீக்கம் 50% ஐ கடந்தது

by Bella Dalima 30-06-2022 | 8:37 PM
Colombo (News 1st) இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பணவீக்கம் ( (Inflation)எனப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு வேகம் 50 வீதத்தை கடந்துள்ளது. இந்த மாதம் பணவீக்கம் 54.6% ஆக பதிவாகியுள்ளது. இந்த மாதத்தில் உணவுப்பொருட்களின் விலைகள் 80 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உணவு அல்லாத பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 42.4 வீதத்தால் அதிகரித்துள்ளன. எரிபொருள் பற்றாக்குறையினால் மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. அரிசி, தானிய வகைகள் உள்ளிட்ட ஏனைய உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்தமையும் இந்த மாதத்தில் பணவீக்கம் அதிகரித்தமைக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.