விற்பனை பொருட்களின் பொதிகளில் உள்ளடக்கப்பட வேண்டிய தயாரிப்பு விபரங்கள் தொடர்பில் வர்த்தமானி  வெளியீடு

விற்பனை பொருட்களின் பொதிகளில் உள்ளடக்கப்பட வேண்டிய தயாரிப்பு விபரங்கள் தொடர்பில் வர்த்தமானி  வெளியீடு

விற்பனை பொருட்களின் பொதிகளில் உள்ளடக்கப்பட வேண்டிய தயாரிப்பு விபரங்கள் தொடர்பில் வர்த்தமானி  வெளியீடு

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2022 | 4:09 pm

Colombo (News 1st) அனைத்து விற்பனை பொருட்களின் பொதிகளிலும் உள்ளடக்கப்பட வேண்டிய அதிகபட்ச சில்லறை விலை உள்ளிட்ட 7 விபரங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த கிரியெல்லவின் கையொப்பத்துடன், இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அனைத்து பொருட்களின் பொதிகளிலும்

1. அதிகபட்ச சில்லறை விலை
2. எடை அல்லது அளவு
3. உற்பத்தி திகதி – மீண்டும் பொதி செய்யப்பட்டிருந்தால் பொதியிடப்பட்ட திகதி
4. காலாவதி திகதி
5. தொகுதி எண்
6. உற்பத்தியாளரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்
7. இறக்குமதி பொருள் எனின் இறக்குமதி செய்யப்பட்ட நாடு மற்றும் இறக்குமதியாளரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்

அதில் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயங்களை பதிவு செய்யாமல், பொருட்கள் எதனையும் தயாரிக்கவோ, இறக்குமதி செய்யவோ, உற்பத்தி செய்யவோ, சேமித்து வைக்கவோ, விநியோகிக்கவோ, பொதியிடவோ, மீண்டும் தொகுக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ கூடாது என நுகர்வோர் விவகார அதிகார சபையின் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்