பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கவுள்ள சீனா

இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு 6 மாதங்களுக்கு உணவு வழங்கவுள்ள சீனா

by Bella Dalima 30-06-2022 | 4:28 PM
Colombo (News 1st) இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்காக 1000 மெட்ரிக் தொன் அரிசியை கல்வி அமைச்சுக்கு சீனா வழங்கியுள்ளது. 7900 பாடசாலைகளின் 11 இலட்சம் மாணவர்களுக்கு 6 மாத காலத்திற்கு உணவு வழங்குவதற்கு சீன அரசு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கான மேலும் இரண்டு தொகுதி அரிசி எதிர்வரும் இரண்டு வாரங்களில் கிடைக்கவுள்ளது.