மீனாவின் கணவர் காலமானார்

மீனாவின் கணவர் காலமானார்

மீனாவின் கணவர் காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

29 Jun, 2022 | 5:04 pm

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை மீனாவின் கணவா் வித்யாசாகா் உயிரிழந்தாா்.

பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமடைந்தவர் மீனா.

2009 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த மென்பொருள் பொறியியலாளரான வித்யாசாகரை நடிகை மீனா திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில், நடிகை மீனாவின் கணவா் வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருக்கு நுரையீரல் தொற்று மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு நன்கொடை வழங்குபவர்கள் யாரும் இல்லாததால், அவருக்கு சிகிச்சை அளிக்க இயல‌வில்லை.

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் வித்யாசாகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், மீண்டும் நுரையீரல் பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். உயா் சிகிச்சைக்காக மற்றொரு தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் வித்யாசாகா் செவ்வாய்க்கிழமை (28) இரவு உயிரிழந்தாா்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்