ஜூலை 22 வரை பெட்ரோலுக்கு சிக்கல்; எரிவாயு கொள்வனவிற்கு உலக வங்கி ஒத்துழைப்பு

ஜூலை 22 வரை பெட்ரோலுக்கு சிக்கல்; எரிவாயு கொள்வனவிற்கு உலக வங்கி ஒத்துழைப்பு

ஜூலை 22 வரை பெட்ரோலுக்கு சிக்கல்; எரிவாயு கொள்வனவிற்கு உலக வங்கி ஒத்துழைப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Jun, 2022 | 7:20 pm

Colombo (News 1st) ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை பெட்ரோல் கப்பலொன்றை நாட்டிற்கு வரவழைக்கும் இயலுமை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு இல்லை என பிரதமர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜூலை 22 ஆம் திகதிக்கு முன்னர் பெட்ரோல் கப்பலொன்றை நாட்டிற்கு வரவழைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஜூலை 11 முதல் 15 ஆம் திகதிக்கு இடையில் கப்பலொன்று வரும் வரை அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான டீசல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, 4 மாதங்களுக்கு தேவையான 100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை உலக வங்கியின் ஒத்துழைப்புடன் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

இதனிடையே, ஜூலை 6, 10, 16, 19, 21, 31 ஆம் திகதிகளில் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்