எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைது

ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதி அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைது

by Bella Dalima 29-06-2022 | 3:19 PM
Colombo (News 1st) கொழும்பு - புறக்கோட்டை, செத்தம் வீதியில் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதி அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுயதொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு கோரி இன்று (29) காலை முதல் இவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.