English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
29 Jun, 2022 | 8:46 pm
Colombo (News 1st) இலங்கை மீனவர்கள் எரிபொருள் நெருக்கடியினால் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாமல் கடலைப் பார்த்தபடியுள்ள நிலையில், இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.
முல்லைத்தீவு – வட்டுவாகல், சிலாவத்தையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் கடற்பகுதியில் இன்று மதியம் ஒரு மணியளவில் இந்திய மீனவர்களின் படகுகளை அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பில் இலங்கை மீனவர்கள் தகவல் வழங்கியதையடுத்து, ஊடகவியலாளர்களும் அங்கு விரைந்தனர்.
அதன்போது, 28 இழுவை படகுகளில் இந்திய மீனவர்கள் Sea of Sri Lanka கடலில் சுதந்திரமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
தடை செய்யப்பட்ட இழுவை மடி மீன்பிடி முறை மூலம் அவர்கள் இலங்கையின் கடல் வளத்தை அழித்துக்கொண்டிருந்தனர்.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இலங்கை பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் அவர்களின் எல்லை மீறல் அதிகரித்துள்ளதாக இலங்கை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
19 Jul, 2022 | 07:38 PM
17 Jul, 2022 | 03:14 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS