அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை: வர்த்தக அமைச்சு தெரிவிப்பு

அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை: வர்த்தக அமைச்சு தெரிவிப்பு

அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை: வர்த்தக அமைச்சு தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Jun, 2022 | 4:42 pm

Colombo (News 1st) அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என வர்த்தக, வாணிப அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இம்மாதம் 25 ஆம் திகதி வரையில் 47,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் S.D.கொடிகார தெரிவித்தார்.

இம்மாதத்தில் மாத்திரம் 25 ,000 மெட்ரிக் தொன் அரிசி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

இந்திய கடன் வசதியின் கீழ் இவை கொண்டுவரப்பட்டுள்ளன.

நாட்டரிசி, சம்பா, வௌ்ளைப் பச்சை அரிசி ஆகியவை அவற்றுள் அடங்குகின்றன.

எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாட்டினால் அரிசி விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்