ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைனில் 18 பேர் பலி

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைனில் 18 பேர் பலி

by Bella Dalima 28-06-2022 | 3:38 PM
உக்ரைன்: கிழக்கு உக்ரைனில் முக்கியத்துவம் வாய்ந்த செவெரோடொனட்ஸ்க் நகரை ரஷ்ய படை முழுமையாகக் கைப்பற்றிய நிலையில், அருகில் உள்ள லிசிசான்ஸ்க் (LysyChansk) நகரிலும் தரைவழி மற்றும் வான்வழியாக குண்டுமழை பொழிந்து வருகிறது. ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் கிரெமன்சுக் ( Kremenchuk) நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்தவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 59 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. லுஹான்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் இராணுவத்தின் வசமிருந்த கடைசி பெரிய நகரான செவெரோடொனட்ஸ்க் ரஷ்யாவிடம் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக வீழ்ந்தது. அதன் அருகேயுள்ள லிசிசான்ஸ்க் நகரிலும் நுழைந்த ரஷ்ய படையினா், நேற்று (27) அந்த நகரத்தின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியதாக லுஹான்ஸ்க் ஆளுநா் சொ்கி ஹைடாய் தெரிவித்துள்ளார். போருக்கு முன்னா் லிசிசான்ஸ்க் நகரில் ஒரு இலட்சம் போ் வசித்த நிலையில், தற்போது 50 சதவீதம் போ் தான் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.