நகர்ப்புற பாடசாலைகளை ஜூலை முதலாம் திகதி வரை மூட தீர்மானம்

நகர்ப்புற பாடசாலைகளை ஜூலை முதலாம் திகதி வரை மூட தீர்மானம்

நகர்ப்புற பாடசாலைகளை ஜூலை முதலாம் திகதி வரை மூட தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

27 Jun, 2022 | 3:45 pm

Colombo (News 1st) மேல் மாகாணத்தின் கொழும்பு வலயத்திலும் கொழும்பை அண்மித்த நகரங்களிலும் ஏனைய பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகளை இன்று (27) முதல் ஜூலை முதலாம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிரமம் இல்லாத கிராமப்புறங்களிலுள்ள பாடசாலைகளை கடந்த வாரம் போன்றே செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நடத்துமாறு கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

அத்துடன், போக்குவரத்து பிரச்சினை காரணமாக குறித்த நாட்களில் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாத ஆசிரியர்களின் விடுமுறையை, தனிப்பட்ட விடுமுறையாக கருத வேண்டாமெனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இன்று ஆரம்பமாகும் பாடசாலை வாரத்தில், கல்வி பொது தராதர உயர்தர மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகளை நடத்த திட்டமிட்டிருந்தால் அவற்றை இரண்டு வாரங்களின் பின்னர் நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சின் ஆலோசனைக் கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்