கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 10% அதிகரிப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 10% அதிகரிப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 10% அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

27 Jun, 2022 | 4:12 pm

Colombo (News 1st) இன்று (27) நள்ளிரவு முதல் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து ஒன்றியத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக போக்குவரத்து கட்டணத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்றுமதி இறக்குமதி கொள்கலன் போக்குவரத்தில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சனத் மஞ்சுள குறிப்பிட்டார்.

உதிரிப்பாகங்களின் விலைகளும் அதிகரித்துள்ள நிலையில், எரிபொருளுக்கான செலவை மாத்திரம் ஈடு செய்யும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து ஒன்றியத்தின் தலைவர் சனத் மஞ்சுள சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்