கஹதுடுவயில் தீ விபத்தில் தம்பதியர் பலி; பிள்ளைகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

கஹதுடுவயில் தீ விபத்தில் தம்பதியர் பலி; பிள்ளைகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

கஹதுடுவயில் தீ விபத்தில் தம்பதியர் பலி; பிள்ளைகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

26 Jun, 2022 | 3:38 pm

Colombo (News st) கஹதுடுவ – தோலேகடே பகுதியிலுள்ள வீடொன்றின் அறைக்குள் பரவிய தீயில் சிக்கி காயமடைந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

41 வயதான ஆணும் 38 வயதான அவரின் மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தீ சம்பவத்தில் காயமடைந்த 21 வயதான அவர்களின் பெண் பிள்ளை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

7 வயதான மற்றைய பெண் பிள்ளை கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவ இடத்திற்கு இரசாயன பகுப்பாய்வாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்