எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

26 Jun, 2022 | 7:11 am

Colombo (News 1st) இன்று (26) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை  அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 470 ரூபாவாகும்

ஒரு லிட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 550 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் ஒட்டோ டீசல் 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 460 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

சுப்பர் டீசல்75 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 520 ரூபாவாகும்.

இதேவேளை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலை அதிகரிப்பிற்கு இணையாக தமது எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்