புதிய சாதனை படைத்த விக்ரம்

புதிய சாதனை படைத்த விக்ரம்

by Bella Dalima 25-06-2022 | 6:17 PM
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் இதுவரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்தடுத்து பல புதுப்படங்கள் வெளி வந்தாலும் விக்ரம் மீதான ரசிகர்களின் ஆர்வம் இன்றும் குறையவில்லை. இதையடுத்து, விக்ரம் திரைப்படம் 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளதை படக்குழுவினர் போஸ்டருடன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும், விக்ரம் படத்தின் மொத்த வசூல் உலக அளவில் ரூ400 கோடியை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக எந்த ஒரு தமிழ் படமும் இந்த வசூலை எட்டவில்லை.