வெளிநாட்டு நாணயங்களை வைத்திருப்பதற்கான நிபந்தனைகளில் திருத்தம்

வெளிநாட்டு நாணயங்களை வைத்திருப்பதற்கான நிபந்தனைகளில் திருத்தம்

வெளிநாட்டு நாணயங்களை வைத்திருப்பதற்கான நிபந்தனைகளில் திருத்தம்

எழுத்தாளர் Staff Writer

25 Jun, 2022 | 5:00 pm

Colombo (News 1st) வெளிநாட்டு நாணயங்களை வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை பிரஜை ஒருவர் அல்லது இலங்கையில் வசிக்கும் ஒருவர் தம்வசம் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயத்தின் அளவு 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக அல்லது அதற்கு சமமானதாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிபந்தனைகள் இம்மாதம் 16 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

எவ்வாறாயினும், அன்றைய தினம் முதல் 14 நாட்களுக்கு பொது மன்னிப்பு காலத்தை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில், மேலதிக பணத்தை தனிப்பட்ட வெளிநாட்டு நாணய கணக்கில் அல்லது வியாபார வெளிநாட்டு நாணய கணக்கில் வைப்பிலிட அல்லது அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற வர்த்தக வங்கி, தேசிய சேமிப்பு வங்கிக்கு விற்பனை செய்ய முடியும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

புதிய விதிகளை மீறுவோருக்கு எதிராக அந்நிய செலாவணி சட்டத்தின் விதிகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்