மகளிர் கிரிக்கெட்: இலங்கையை 5 விக்கட்களால் வெற்றியீட்டிய இந்தியா

மகளிர் கிரிக்கெட்: இலங்கையை 5 விக்கட்களால் வெற்றியீட்டிய இந்தியா

மகளிர் கிரிக்கெட்: இலங்கையை 5 விக்கட்களால் வெற்றியீட்டிய இந்தியா

எழுத்தாளர் Staff Writer

25 Jun, 2022 | 5:44 pm

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் மகளிர் அணிக்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய மகளிர் அணி 05 விக்கட்களால் இன்று வெற்றியீட்டியது.

ரஞ்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 07 விக்கட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது.

விஷ்மி குணரத்ன 45 ஓட்டங்களையும் அணித்தலைவி சமரி அத்தபத்து 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

126 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய கிரிக்கெட் மகளிர் அணி இறுதி 5 பந்துகள் மீதமிருக்கும் போதே வெற்றியிலக்கை கடந்தது.

ஸ்மிருதி மந்தனா 39 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் ஓஷதி ரணசிங்க மற்றும் இனோகா ரணவீர ஆகியோர் தலா 2 விக்கட்களை கைப்பற்றினர்.

இதற்கமைவாக, 03 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்திய கிரிக்கெட் மகளிர் அணி கைப்பற்றியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்