திருகோணமலையில் 6 மோட்டார் குண்டுகள் கண்டெடுப்பு

திருகோணமலையில் 6 மோட்டார் குண்டுகள் கண்டெடுப்பு

திருகோணமலையில் 6 மோட்டார் குண்டுகள் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Jun, 2022 | 3:56 pm

Colombo (News 1st) திருகோணமலை – பாலத்தடிச்சேனையில் RPG ரக மோட்டார் குண்டுகள் 6 கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலத்தடிச்சேனை பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து இந்த குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள காணியில் கண்டெடுக்கப்பட்டுள்ளமையினால், மேலும் குண்டுகள் காணப்படலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் படி, குண்டுகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்