கொழும்பின் சில பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 25-06-2022 | 4:42 PM
Colombo (News 1st) இன்றிரவு 10 மணி தொடக்கம் நாளை (26) காலை 8 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு எத்துள்கோட்டே உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைவாக பிட்டகோட்டை, பெத்தகான, மிரிஹான, மாதிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, அம்புல்தெனிய, நுகேகொடை, பாகொட முதல் விஜேராம சந்தியின் ஹைலெவல் வீதியின் 07 ஆம் கட்டை மற்றும் அதனுடன் தொடர்புடைய குறுக்கு வீதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. நுகேகொடை சந்தி முதல் நாவல திறந்த பல்கலைக்கழக வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய குறுக்கு வீதிகளுக்கும் இன்றிரவு 10 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய திருத்த பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்