கால்நடை தீவன உற்பத்திக்கு அரிசி அல்லது நெல்லை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது

கால்நடை தீவன உற்பத்திக்கு அரிசி அல்லது நெல்லை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது

கால்நடை தீவன உற்பத்திக்கு அரிசி அல்லது நெல்லை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

25 Jun, 2022 | 3:49 pm

Colombo (News 1st) கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ பயன்படுத்துவதையோ தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு 2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபையின் சட்டத்தின் கீழ் நேற்று (24) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், கால்நடை தீவன உற்பத்திக்காகவோ அல்லது வேறு ஏதேனும் மூலப்பொருளுக்காகவோ அரிசி அல்லது நெல்லை நேரடியாக இறக்குமதி செய்வது, விற்பனை செய்வது, சேமித்து வைப்பது, கொண்டு செல்வது, விநியோகிப்பது அல்லது கொள்வனவு செய்வது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்