யாழ். கொல்லங்கலட்டியில் வெட்டுக்காயங்களுடன் மூதாட்டியின் சடலம் மீட்பு

யாழ். கொல்லங்கலட்டியில் வெட்டுக்காயங்களுடன் மூதாட்டியின் சடலம் மீட்பு

யாழ். கொல்லங்கலட்டியில் வெட்டுக்காயங்களுடன் மூதாட்டியின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Jun, 2022 | 5:53 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, கொல்லங்கலட்டி பகுதியில் வெட்டுக்காயங்களுடன் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

78 வயதான பெண் ஒருவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கூரான ஆயுதத்தால் தாக்கி குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்