அரச உத்தியோகத்தர்களை தனியார் துறை தொழில்களில் ஈடுபடுத்த முடியுமா என ஆராய்வு

அரச உத்தியோகத்தர்களை தனியார் துறை தொழில்களில் ஈடுபடுத்த முடியுமா என ஆராய்வு

அரச உத்தியோகத்தர்களை தனியார் துறை தொழில்களில் ஈடுபடுத்த முடியுமா என ஆராய்வு

எழுத்தாளர் Bella Dalima

24 Jun, 2022 | 5:18 pm

Colombo (News 1st) உள்நாட்டிலேயே தனியார் து​றையில் தொழிலை தொடர்வதற்கு அரச உத்தியோகத்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

5 வருட சம்பளமில்லாத விடுமுறையில் அரச ஊழியர்கள் தனியார் துறையில் அல்லது வேறு ஏதேனும் தொழிலில் ஈடுபட அனுமதிக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் M.M.P.K.மாயாதுன்னே தெரிவித்தார்.

இதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் 7 பேர் அடங்குகின்றனர்.

இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் M.M.P.K.மாயாதுன்னே குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்