பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து பரிசீலனை

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து பரிசீலனை

by Bella Dalima 23-06-2022 | 3:40 PM
Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை ( 27) முதல் மீண்டும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார். பாடசாலைகள் நடத்தப்படும் முறை தொடர்பில் நாளை (24) மாகாண மட்டத்தில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக அமைச்சர் கூறினார். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார். நேற்று பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை 65 வீதமாக பதிவாகியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.