30 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியாவை வென்று வரலாறு படைத்த இலங்கை

30 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியாவை வென்று வரலாறு படைத்த இலங்கை

30 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியாவை வென்று வரலாறு படைத்த இலங்கை

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2022 | 6:30 am

Colombo (News 1st) இலங்கை மண்ணில் வைத்து 30 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரொன்றை இலங்கை அணி கைப்பற்றி வரலாறு படைத்தது.

இறுதி பந்து வரை விறுவிறுப்பாக நடைபெற்ற நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

R.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றது.

சரித் அசலங்க கன்னிச்சதம் கடந்து 110 ஓட்டங்களை பெற்றார்.

தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களைப் பெற்றார்.

வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்ரேலிய அணிக்கு டேவிட் வார்னர் வலுவூட்டினார்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அவர், ஓர் ஓட்டத்தால் சதம் பெறும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

Pat Cummins 35 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார்.

இறுதி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், மத்தியூ குணமன் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடினார்.

இறுதிப் பந்தில் 5 ஓட்டங்களே தேவைப்பட்ட நிலையில், அவர் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக சரித் அசலங்க தெரிவானார்.

2010 ஆம் ஆண்டின் பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் தொடரொன்றை இலங்கை அணி கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இறுதியாக 2010 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் வைத்து சர்வதேச ஒருநாள் தொடரை 2-1 என இலங்கை அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்