33 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

தெரிவு செய்யப்பட்ட 33 இலட்சம் குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

by Staff Writer 22-06-2022 | 4:37 PM
Colombo (News 1st) பொருளாதார நெருக்கடியில் வாழும் தெரிவு செய்யப்பட்ட 33 இலட்சம் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கான நிதியை உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் வழங்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன தெரிவித்தார். இந்த கொடுப்பனவு 6 மாதங்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.