மட்டக்களப்பில் உழவு இயந்திரம் விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் உழவு இயந்திரம் விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் உழவு இயந்திரம் விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2022 | 3:57 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – கரடியனாறு, மாவடியோடை குறுக்கு வீதியின் ஈரளக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உழவு இயந்திரமொன்று இயந்திரக்கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த வயல் காணிக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியும் அதில் பயணித்த மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

செங்கலடியை சேர்ந்த 53 மற்றும் 56 வயதான இருவரே விபத்தில் சிக்கியுள்ளனர்.

சடலங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்