பெரும்போகத்தில் செய்கையின் அளவை அதிகரிக்க தீர்மானம்

பெரும்போகத்தில் செய்கையின் அளவை அதிகரிக்க தீர்மானம்

பெரும்போகத்தில் செய்கையின் அளவை அதிகரிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2022 | 6:00 pm

Colombo (News 1st) உணவுத் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக எதிர்வரும் பெரும்போகத்தில் செய்கையின் அளவை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் பெரும்போகத்தை ஆரம்பிக்குமாறு விவசாய திணைக்களத்தால் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

8 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சோளம் , பாசிப் பயறு உள்ளிட்ட பெரும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கான நிலப்பரப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வீட்டுத்தோட்டம் அமைப்பதில் அதிக கவனத்தை செலுத்துமாறு விவசாயத் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

நிறுவனங்களில் உள்ள வெற்றுக்காணிகளில் பெரும் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்