பிரதமர் வீட்டின் முன்பாக ஹிருணிக்கா தலைமையில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

பிரதமர் வீட்டின் முன்பாக ஹிருணிக்கா தலைமையில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2022 | 3:47 pm

Colombo (News 1st) எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு அமைந்துள்ள கொழும்பு ப்ளவர் வீதியின் 5 ஆம் ஒழுங்கை பொலிஸாரால் மூடப்பட்டது.

குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

ஐக்கிய மகளிர் சக்தியின் ஏற்பாட்டில், பிரதமரின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிரதமரை சந்தித்து நாட்டின் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் கோரி ஹிருணிக்கா பிரேமச்சந்திர தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும், பிரதமரின் இல்லத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து, கொழும்பு ரோயல் கல்லூரிக்கு முன்பாக வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிரதமரின் இல்லத்திற்குள் இரண்டாவது முறையாகவும் பிரவேசிக்க முற்பட்ட போது, மீண்டும் பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது.

இதன் பின்னர், பிரதமரின் பிரதிநிதியொருவர் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்து மகஜரை பெற்றுக்கொண்டதன் பின்னர், ஐக்கிய மக்களிர் சக்தி உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்