பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2022 | 3:19 pm

Colombo (News 1st) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க முன்னிலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புத்தகத்திலும் அவர் கையொப்பமிட்டார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ இராஜினாமா செய்த பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே தம்மிக பெரேரோ நியமிக்கப்பட்டுள்ளார்.

தம்மிக பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்வதை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது நிராகரிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்