கம்பஹாவின் சில பகுதிகளில் 8 மணித்தியால நீர்வெட்டு

கம்பஹாவின் சில பகுதிகளில் 8 மணித்தியால நீர்வெட்டு

கம்பஹாவின் சில பகுதிகளில் 8 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2022 | 4:29 pm

Colombo (News 1st) கம்பஹாவின் சில பகுதிகளில் இன்றிரவு 10 மணி முதல் நாளை (23) காலை 6 மணி வரையான 8 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், கம்பஹா – மிரிஸ்வத்த வீதியின் ஹங்சகிரி வீதி வரையிலும், யக்கல வீதியின் ஹங்சகிரி வீதி வரையிலும், ஒருதொட்ட வீதியின் களு பாலம் வரையும், உடுகம்பள வீதியின் சதொச அருகிலுள்ள பாலம் வரையான பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனை தவிர, ஜாஎல வீதியின் புகை பரிசோதிக்கும் நிலையம் வரையான பகுதியிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு – கண்டி வீதியின் யக்கல வீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நீர்க்குழாய் திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்