எரிபொருள் வரிசையில் 10 ஆவது மரணம்

எரிபொருள் வரிசையில் 10 ஆவது மரணம்

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2022 | 7:49 pm

Colombo (News 1st) எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

மத்துகம – அகலவத்தை எரிபொருள் நிலையத்தில் தமது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக மூன்று நாட்களாக காத்திருந்த ஒருவர் லொறியொன்றில் மோதி உயிரிழந்துள்ளார்.

பதுரலியவில் இருந்து அகலவத்தை நோக்கி பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில்
பதுரலியவை சேர்ந்த 55 வயதான இத்தகொட ஹேவகே ஜகத் என்பவர் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் வரிசைகளுடன் தொடர்புபட்டு பதிவான மரணங்களில் நியூஸ்ஃபெஸ்ட் அறிக்கையிடும் 10 ஆவது மரணம் இதுவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்