ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; உயிரிழப்பு 1000 ஆக அதிகரிப்பு, 1500 பேருக்கு காயம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; உயிரிழப்பு 1000 ஆக அதிகரிப்பு, 1500 பேருக்கு காயம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; உயிரிழப்பு 1000 ஆக அதிகரிப்பு, 1500 பேருக்கு காயம்

எழுத்தாளர் Bella Dalima

22 Jun, 2022 | 6:08 pm

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானை உலுக்கிய பாரிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்துள்ளதுடன், 1500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான Paktika பகுதியில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கே அமைந்துள்ள Khost நகரத்திலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் அநேகமான பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன.

இரண்டு தசாப்தங்களில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்