ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 255 பேர் உயிரிழப்பு 

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 255 பேர் உயிரிழப்பு 

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 255 பேர் உயிரிழப்பு 

எழுத்தாளர் Bella Dalima

22 Jun, 2022 | 3:36 pm

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானில் இன்று (22) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரங்களில் இன்று காலை நேரிட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

பத்திகா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 90-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. இதில் இதுவரை 255 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதாகவும் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்