by Staff Writer 21-06-2022 | 4:50 PM
Colombo (News 1st) வெள்ளிக்கிழமை (24) முதல் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் கலந்துரையாடியதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என செயலாளர் கூறியுள்ளார்.
இதற்காக, கொழும்பு மாவட்டத்தில் 9 நிரப்பு நிலையங்களும் கம்பஹா மாவட்டத்தில் 06 நிரப்பு நிலையங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை வெற்றி பெற பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமென சுகாதார அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.