by Bella Dalima 21-06-2022 | 5:36 PM
Colombo (News 1st) உலக புகழ்பெற்ற ஜம்போ கப்பல் உணவகம் (Jumbo Floating Restaurant) கடலில் மூழ்கியுள்ளது.
ஹாங்காங்கின் மிதக்கும் உணவகமான ஜம்போ கடலில் மூழ்கியதாக அதன் நிறுவனம் அறிவித்துள்ளது.
1976 ஆம் ஆண்டில் ஜம்போ கப்பலில் உணவக சேவை ஆரம்பிக்கப்பட்டது.
பிரித்தானிய மகாராணி எலிசபெத் அடங்கலாக சுமார் 3 மில்லியன் விருந்தினர்கள் இந்த கப்பல் உணவகத்தில் உணவருந்தியுள்ளனர்.
உலக புகழ்பெற்ற இந்த கப்பல் உணவகம் கொரோனா தொற்று காரணமாக பெரும் நிதிச்சுமைக்குள் தள்ளப்பட்டது.
கொரோனாவால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பயணத்தடை காரணமாக ஜம்போ கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக குறித்த கப்பலில் உணவக சேவை முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், தென் சீன கடலில் பயணித்துக்கொண்டிருந்த போது கப்பல் நீரில் மூழ்கிவிட்டதாக அதன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.