மூன்று துறைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

மூன்று துறைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

மூன்று துறைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2022 | 5:02 pm

Colombo (News 1st) மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக,

1. மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய சேவைகள்

2. பெட்ரோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம்

3. வைத்திய சேவைகள்

ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இந்த சேவைகள் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்பதால், அவற்றுக்கு இடையூறு அல்லது தடை ஏற்படலாமென்பதை கருத்திற்கொண்டு இந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்