பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக சில எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

by Staff Writer 21-06-2022 | 4:05 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் இன்று முதல் ஒரு வாரத்திற்கு சபை நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக பாராளுமன்றத்தில் அறிவித்தன. தற்போதைய நெருக்கடி நிலைக்கு அரசாங்கத்தினால் உரிய தீர்வுகள் முன்வைக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன மக்களின் வலிகளை உணராமல், பொய் கூறி செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார். இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, தமது கட்சியும் பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்தார்.