தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக  பதவியேற்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் நிராகரிப்பு

தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக  பதவியேற்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2022 | 4:41 pm

Colombo (News 1st) பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவின் பெயர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு வர்த்தமானி வௌியிடப்பட்டது.

இந்நிலையில், அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி 5 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அடிப்படை உரிமை மனு தொடர்பான தீர்ப்பு கிடைக்கும் வரை, பாராளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ தாம் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளப்போவதில்லை என வர்த்தகரான தம்மிக்க பெரேரா உயர் நீதிமன்றத்தில் நேற்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்