வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

மொரட்டுவையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு 

by Bella Dalima 20-06-2022 | 4:33 PM
Colombo (News 1st) மொரட்டுவை - மொரட்டுமுல்ல, மோல்பே குறுக்கு வீதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சடலத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதுடன், கைகள் கயிற்றினால் கட்டப்பட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.