by Bella Dalima 20-06-2022 | 8:23 PM
Colombo (News 1st) அடிப்படை உரிமை மனு தொடர்பான தீர்ப்பு கிடைக்கும் வரை, பாராளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ தாம் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளப்போவதில்லை என வர்த்தகரான தம்மிக்க பெரேரா உயர் நீதிமன்றத்தில் இன்று உறுதியளித்துள்ளார்.
அவரை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கின்றமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 05 அடிப்படை உரிமை மனுக்களும் இன்று உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, வர்த்தகரான தம்மிக்க பெரேரா சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்த்தன, யசந்த கோத்தாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.