by Bella Dalima 19-06-2022 | 4:14 PM
Colombo (News 1st) தூர பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் நாளை (20) ஆரம்பமாகவுள்ள வாரத்தில் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
9 மாகாணங்களிலுமுள்ள கஷ்டப்பிரதேசங்களிலுள்ள அதிபர்கள் உள்ளிட்ட அனைத்து
அதிகாரிகளிடமும் கலந்துரையாடியதன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி
அமைச்சர் கூறினார்.