பரீட்சைகளை தொடர்ந்து நடத்த ரஜரட்ட பல்கலை தீர்மானம்

ஒன்லைனில் விரிவுரை; பரீட்சைகளை தொடர்ந்து நடத்த ரஜரட்ட பல்கலைக்கழகம் தீர்மானம் 

by Bella Dalima 19-06-2022 | 4:21 PM
Colombo (News 1st) ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நாளை (20) முதல் இரண்டு வாரங்களுக்கு விரிவுரைகளை ஒன்லைனில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து பரீட்சைகளையும் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கினிகத்தர தெரிவித்தார். அடுத்த வாரத்தில் பல்கலைக்கழக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.