எரிபொருள் நெருக்கடி தொடர்பில் நாளை கலந்துரையாடல்

எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாளை (19) கலந்துரையாடல் 

by Bella Dalima 19-06-2022 | 4:59 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (20) இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதுடன், எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மக்களை மேலும் ஒடுக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு எதிராக அடுத்த வாரம் முதல் தொடர் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. சர்வகட்சி அரசாங்கத்தை விரைவில் அமைப்பதற்கு தற்போது பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.