வீடுகளில் இருந்து வேலை செய்யும் முறைமையை பின்பற்றுமாறு தொழில் அமைச்சு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை

வீடுகளில் இருந்து வேலை செய்யும் முறைமையை பின்பற்றுமாறு தொழில் அமைச்சு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை

வீடுகளில் இருந்து வேலை செய்யும் முறைமையை பின்பற்றுமாறு தொழில் அமைச்சு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2022 | 4:32 pm

Colombo (News 1st) தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், வீடுகளில் இருந்து வேலை செய்யும் முறைமையை பின்பற்றுமாறு தொழில் அமைச்சு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தனியார் துறையினரும் பின்பற்றுவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதென அமைச்சின் செயலாளர் A.J. விமலவீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலை வழமைக்கு திரும்பும் வரை அரசாங்கத்திற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குமாறு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இறக்குமதி செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு இடையூறுகள் ஏற்படாத வண்ணம் உரிய வேலைத்திட்டங்களை பின்பற்றுமாறு அரசாங்கத்தினால் தனியார் பிரிவினரிடம் கேட்டுக்கொள்ளப்படுவதாக தொழில் அமைச்சின் செயலாளர் A.J.விமலவீர மேலும் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்