சிறுபோக செய்கைக்கு தேவையான யூரியா உரம் ஜூலை 6 கொண்டுவரப்படும்: விவசாய அமைச்சர்

சிறுபோக செய்கைக்கு தேவையான யூரியா உரம் ஜூலை 6 கொண்டுவரப்படும்: விவசாய அமைச்சர்

சிறுபோக செய்கைக்கு தேவையான யூரியா உரம் ஜூலை 6 கொண்டுவரப்படும்: விவசாய அமைச்சர்

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2022 | 3:51 pm

Colombo (News 1st) சிறுபோக செய்கைக்கு தேவையான யூரியா உரம் அடுத்த மாதம் 6 ஆம் திகதி நாட்டிற்கு கொண்டுவரப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த உரம் விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

65,000 மெட்ரிக் தொன் யூரியா உரமே  இறக்குமதி செய்யப்படுகின்றது.

பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை முற்பதிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக பல நாடுகளுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர்  மஹிந்த அமரவீர கூறினார்.

எவ்வாறாயினும், பெரும்போகத்தின் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை அறுவடை தொடரும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்