அத்துருகிரியவில் அமைதியின்மை; 6 பொலிஸார் காயம் 7 பேருக்கு விளக்கமறியல்

by Staff Writer 18-06-2022 | 8:05 PM
Colombo (News 1st) எரிபொருள் இல்லாமையினால் நாட்டின் பல்வேறு துறைகள் செயலிழந்துள்ளன. இந்நிலையில்,  நேற்றிரவு அத்துருகிரியே எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. எரிபொருள் நிறைவுற்றதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வரிசையில் காத்திருந்த மக்கள் பாதுகாப்பு வேலிகளைத் தகர்த்து உட்பிரவேசிக்க முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஏற்பட்ட மோதலில் 6 பொலிஸார் காயமடைந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேர் இன்று கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 7 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.