ஆசிரியர்களை வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுத்த தீர்மானம்

ஆசிரியர்களை வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுத்த தீர்மானம்

ஆசிரியர்களை வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுத்த தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2022 | 3:28 pm

Colombo (News 1st) போக்குவரத்து பிரச்சினை​யை எதிர்நோக்கும் ஆசிரியர்களை அவர்களது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சென்று கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

டிசம்பர் 31 ஆம் திகதி வரை அவ்வாறு ஆசிரியர்கள் தமது பணிகளை முன்னெடுக்க முடியும்.

இந்த விடயம் தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளர், வலயக் கல்வி பணிப்பாளருக்கு அதிகாரமளிக்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்றுநிருபமொன்று வௌியிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய சுற்றுநிருபத்திற்கு அமைய தேசிய பாடசாலை, மாகாண பாடசாலைகள் என்ற வேறுபாடுகள் இன்றி ஆசிரியர்கள் தமது பணிகளை முன்னெடுக்க முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்