வௌ்ளிக்கிழமைகளில் விடுமுறை; சுற்றுநிருபம் வௌியீடு

வௌ்ளிக்கிழமைகளில் விடுமுறை; சுற்றுநிருபம் வௌியீடு

by Staff Writer 16-06-2022 | 6:36 PM
Colombo (News 1st) நாளை (17) முதல் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு பிரதி வௌ்ளிக்கிழமைகளில் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கும் சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுக்கு இந்த சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடியால் போக்குவரத்தை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக வெள்ளிக்கிழமைகளில் வீடுகளில் இருந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அரச ஊழியர்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. எனினும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களால் வௌ்ளிக்கிழமைகளில் திறக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களுக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தாது. அலுவலகங்கள் மூடப்படும் காலப்பகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலைக்கு அழைக்குமாறு பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். அத்தோடு, வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படும் அலுவலகங்களில் உள்ள ஊழியர்களை அன்றோ அல்லது அதற்கு அடுத்த சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளிலோ கூடுதல் நேரம் அல்லது விடுமுறை ஊதிய அடிப்படையில் பணிக்கு அமர்த்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழமையின் ஐந்து வேலை நாட்களில் வௌ்ளிக்கிழமை அல்லாத வேறு ஒரு அரச விடுமுறை வருமிடத்து அந்த வாரத்தின் வௌ்ளிக்கிழமைமையை சாதாரண வேலை நாளாகக் கருதி அலுவலகங்கள் திறக்கப்பட வேண்டும். இந்த புதிய சுற்றுநிருபத்தின் மூலம் அரச நிறுவனங்களில் ஊழியர்களை குறைப்பது தொடர்பாக மே மாதம் 05 ஆம் திகதி வௌியிடப்பட்ட சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, குறைவான ஊழியர்களை அழைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை கிழமை நாட்களில் சாதாரணமாக முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள், தொழிலாளர் தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்