திறந்த கணக்கு முறையின் கீழ் மீண்டும் இறக்குமதி

அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்கு முறையின் கீழ் மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி

by Staff Writer 16-06-2022 | 4:34 PM
Colombo (News 1st) அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்கு முறையின் கீழ் மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். இதன்படி, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பெருமளவில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார். பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர் விநியோகஸ்தர்களுக்கு பணம் செலுத்தப்படும் முறையே திறந்த கணக்கு முறையாகும். இதற்கு முன்னரும் இந்த வங்கிக் கணக்கு முறையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கடந்த 6 ஆம் திகதி முதல் அந்த முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.